கருணாநிதி குறித்து தரக்குறைவான பேச்சுஅதிமுக பேச்சாளர் கைது

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தரக்குறைவாக பேசியதாக அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அதிமுக சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

அதிமுக தலைமைக் கழக பேச்சாளார் செய.கோவிந்தன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் தமிழக முதல்வரையும், அவரது குடும்பத்தாரையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கொத்தமங்கலம் திமுக கிளைச் செயலாளர் வீரமுத்து போலீஸில் புகார் கொடுத்தார். அதில், முதல்வர் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் செய. கோவிந்தன் தரக்குறைவாக பேசினார். அதை தடுக்க சென்ற தன்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார் என்று கூறியிருந்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஹோட்டலில் தங்கி இருந்த செய. கோவிந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+