சென்னையிலிருந்து திருப்பதி சென்ற கார்:மலைப் பாதையில் தீப்பிடித்து எரிந்தது
திருப்பதி:
சென்னையிலிருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தவரின் கார், திருப்பதி மலைப் பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 4 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
சென்னையைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் மற்றும் 3 பேர் கார் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்குச் சென்றனர். திருமலை - திருப்பதி மலைப் பாதையில் அவர்களின் கார் சென்றபோது திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
இதையடுத்து காரிலிருந்த நான்கு பேரும் வேகமாக இறங்கி உயிர் தப்பினர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர். தீவிபத்தில் காரின் பெட்ரோல் டேங்க் பாதிப்படையவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த திடீர் விபத்தால் மலைப் பாதையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
