புதுக்கோட்டை: எம்.பி தொகுதி ரத்தைஎதிர்த்து அதிமுக உண்ணாவிரதம்
சென்னை:புதுக்கோட்டை எம்.பி. தொகுதி நீக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை புதுக்கோட்டையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
![]() |
நாடாளுமன்ற தொகுதிக மறுசீரமைப்பு என்ற பெயரில், புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. அது மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டமன்ற தொகுதிகளையும் நான்கு மாவட்ட எம்பி தொகுதிகளுடன் இணைத்து அம்மாவட்ட மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.
புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்தது. இவ்வாறு பிரித்ததால் இந்த மாவட்டத்திற்கு சேர வேண்டிய வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் புறக்கணிக்கப்படும். இதனால் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாகவும் இருக்கும்.
எனவே நாடாளுமன்ற மறு சீரமைப்பு எல்லை வரையறையில் மாற்றம் செய்து, புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் அமைத்திட இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி நாளை அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் உரிமைப் பிரச்சனை என்பதால் அம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications