இந்தியர்கள் உள்ளிட்ட 40,000 பேருக்குகுடியுரிமை: சிங்கப்பூர் அமைச்சர் உறுதி
சிங்கப்பூர்:இந்தியர்கள் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரம் பேருக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்படும் என சிங்கப்பூர் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான வோங் கான் செங் கூறியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 155 பேருக்கு சிங்கப்பூர் குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசுகையில், இவ்வாறு தெரிவித்தார் செங்.
அவர் பேசுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 லட்சம் பேருக்கு நிரந்தரமாக தங்கும் அந்தஸ்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேருக்கு சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்படும் என்றார்.
நவீன சிங்கப்பூரின் சிற்பிகளில் ஒருவரும், முன்னாள் துணைப் பிரதமருமான மறைந்த எம்.எஸ்.ராஜரத்தினம் சிங்கப்பூர் குடிமகனாக இருப்பது பெருமைக்குரியது என்று கூறியிருந்ததை தனது பேச்சில் நினைவு கூர்ந்தார் செங்.
இதுபோன்ற குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வழக்கமாக குடியுரிமைப் பிரிவு அலுவலகத்தில்தான் நடக்கும். அதிகாரிகள்தான் சான்றிதழ்களை வழங்குவர்.
ஆனால் முதல் முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications