இலவச டிவி விண்ணப்பம் காசுக்கு விற்பனை!
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தமிழக அரசின் இலவச டிவியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை பணத்திற்கு விற்று வருவதாக கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் பஞ்சாயத்துப் பிரமுகர் மீதும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தென்மலை முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தென்மலை அருகிலுள்ள துரைச்சாமிபுரத்தில் இலவச கலர் டி.வி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி அப்பகுதியில் கேபிள் டி.வி நடத்தும் ஒரு நபரும், உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் மற்றொரு நபரும் இணைந்து இலவச கலர் டி.வி விண்ணப்ப படிவத்தினை தலா ரூ. 52-க்கு விற்பனை செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து பொது மக்கள் ரசீது கேட்டதற்கு அவர்கள் கேபிள் டி.வி கட்டணத்திற்குக் கொடுக்கப்படும் ரசீதினை கொடுத்துள்ளனர். மேலும், இந்தப் பணம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக போட்டோ எடுப்பதற்காக என்றும் கூறியுள்ளனர்.
இவ்வாறு 500 பேரிடம் பண மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications