நூற்றுக்கணக்கான போலீஸார் புடை சூழவைகுண்டராஜன் வீடு, அலுவலகங்களில் ரெய்டு!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:வி.வி. மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜன் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான போலீஸார் புடை சூழ இன்று அதிரடி சோதனை நடந்து வருகிறது.

ஜெயா டிவியின் முக்கிய பங்குதாரர் வைகுண்டராஜன். வி.வி. என்டர்பிரைசஸ், விவி மினரல்ஸ் என்ற பெயர்களில் பல்வேறு நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.

Vaikunda Rajan

கடற்கரை மணலில் கிடைக்கும் கனிமத்தைப் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு விற்று வருகிறார் வைகுண்டராஜன். இந்த நிலையில் இவர் மீது சமீபத்தில் போலீஸார் இரு வழக்குகளைப் பதிவு செய்தனர். இதையடுத்து வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார்.

இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார் வைகுண்டராஜன் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, போலீஸில் சரணடையுமாறு வைகுண்டராஜனுக்கு உத்தரவிட்டது.

ஆனால் வைகுண்டராஜன் சரணடையவில்லை. இதையடுத்து இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வைகுண்டராஜனின் வீடுகள், ஆலைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு நூற்றுக்கணக்கான போலீஸார் திரண்டு வந்தனர்.

வைகுண்டராஜனின் இருப்பிடங்களில் பின்னர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+