மினி பஸ் - லாரி மோதலில் 22 பேர் பலி
ஜோகன்னஸ்பர்க்:தென் ஆப்பிரிக்காவின் கோமதிபூர் என்ற இடத்தில் நடந்த பயங்கர விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
உலகில் அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடக்கும் நாடாக தென் ஆப்பிரிக்கா விளங்குகிறது. இங்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் சாலை விபத்துக்கள் இறக்கின்றனர்.
இங்குள்ளவர்கள் சாலை விதிகளை சுத்தமாக மதிப்பதில்லை. படு வேகமாக கார் ஓட்டுவதால் விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் 1 லட்சம் பேருக்கு 25 பேர் சாலை விபத்துக்களில்தான் உயிரிழக்கின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள மினி பஸ் டாக்சிகள்தான் அதிக அளவில் விபத்தில் சிக்குகின்றன. இந்த வாகனங்களில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று அரசு பலமுறை கூறியும் இந்த டாக்சிகள் மாற்றப்படாமல் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இதுபோன்ற ஒரு மினி பஸ்ஸும், லாரியும் மோதிக் கொண்டதில் 22 பேர் இறந்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் கிழக்கில் உள்ள கோமதிபூர் என்ற இடத்தில் நேற்று இந்த பயங்கர விபத்து நடந்தது.
வேகமாக வந்த மினி பஸ் டாக்சியும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் டாக்சி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்து விட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மினி பஸ் டாக்சியை தடை செய்வது குறித்து தென் ஆப்பிரிக்க அரசு யோசித்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications