ஜப்பானில் தரையிறங்கிய விமான என்ஜின்வெடித்து பயங்கர தீ: பயணிகள் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ:ஜப்பானில் தரையிறங்கிய தைவான் நாட்டு விமானம் தீப் பிடித்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அனைத்துப் பயணிகளும் உயிர் தப்பிவிட்டனர்.

தைவானுக்குச் சொந்தமான சைனா ஏர்லைன்ஸ் நிறுவன போயிங் 737-800 விமானம் இன்று காலை தைபேயில் இருந்து கிளம்பி 165 பயணிகளுடன் ஜப்பானின் தெற்கே உள்ள ஒகினவா தீவின் நாகா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Plane Japan

அப்போது விமானத்தின் இடதுபுற என்ஜின் வெடித்துச் சிதறி விமானம் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து 157 பயணிகளும் 8 விமான சிப்பந்திகளும் விமானிகளும் அவசர அவசரமாக விமானத்தை விட்டு தரையிறங்கினர்.

Plane Japan

அவர்கள் அனைவரும் இறங்கிய பின்னர் விமானத்தில் தீ மேலும் அதிகமாகப் பரவியது. தீயில் விமானமே இரண்டாக பிளந்துவிட்டது. எரிந்து கரிக்கட்டையான நிலையில் அந்த விமானம் ரன்வேயில் நின்று கொண்டுள்ளது.

சைனா ஏர்லைன்ஸ் விமானங்கள் விபத்துகளுக்குப் பேர் போனவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 13 ஆண்டுகளில் 4 பெரிய விபத்துகளை இந்த நிறுவனம் சந்தித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+