லண்டனை சேர்ந்த இலங்கை தமிழரிடம்பணம் பறித்த 3 போலீசார் கைது
திருச்சி:இலங்கைத் தமிழரின் குடும்பத்தினரை மிரட்டி ரூ. 1.3 லட்சம் பணம் பறித்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழரான ரமேஷ் தனது குடும்பத்தினருடன் கடந்த 3ம் தேதி திருச்சி வந்தார். உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரை திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு ராமசாமி, கிரைம் பிராஞ்சை சேர்ந்த போலீசார் குமார், சகாய செல்வம் ஆகியோர் சந்தித்து நீங்கள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளதாக மிரட்டினர்.
என்ன சொல்கிறார்கள் என்றே புரியாமல் விழித்த ரமேசிடம் ரூ. 10 லட்சம் தந்தால் விட்டுவிடுகிறோம், இல்லாவிட்டால் ஹவாலா கேஸ் போடுவோம் என்றனர்.
வந்த இடத்தில் பிரச்சனையில் சிக்க விரும்பாத ரமேஷ் பேரம் பேசினார். இதையடுத்து ரூ 1.3 லட்சம் தந்தால் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் ரூ. 20,000 பணத்தையும் நகைகளையும் தந்த ரமேஷ் தன்னை விட்டுவிடுமாறு கூறினார்.
ஆனால், மேலும் சில லட்சம் தர வேண்டும் என தொடர்ந்து 3 போலீசாரும் மிரட்டவே சிபிசிஐடி பிரிவுக்கு தகவல் தந்தார் ரமேஷ்.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சொன்னபடி 3 போலீசாரையும் பணம் வாங்க வருமாறு ஒரு இடத்துக்கு வரச் சொன்னார் ரமேஷ். அங்கு சிபிசிஐடி போலீசார் பதுங்கியிருந்தனர்.
3 போலீசாரும் அங்கு வந்து ரமேசிடம் பணத்தை வாங்கியபோது அவர்களை சிபிசிஐடி போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். மூவரும் திருச்சி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும் கைது செய்து உள்ளே தள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications