6 அமாவாசைக்குள் திமுக ஆட்சி அவுட்: அதிமுக
கரூர்:கரூர் நகராட்சியில் சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருக்க அதிமுக முயன்றது. ஆனால் அதிமுக உண்ணாவிரத பந்தலுக்கு முன்பு திமுகவினரும் போராட்டத்தில் குதித்ததால் பதட்டம் உருவானது.
இதனால் அதிமுகவினரின் உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இனாம் கருர் நகராட்சியில் சாலை, மின்சாரம், குடிநீர்,போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி தர வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து உரிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கருரில் நேற்று அதிமுக சார்பில் இனாம் கருர் நகராட்சியை கண்டித்து வெங்கமேடு அண்ணா சிலை அருகில் 500 க்கும் மேற்பட்டோர் கழக அமைப்பு துனை செயலாளர் சின்னசாமி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
திமுக தரப்பு எத்தகைய தொந்தரவு கொடுத்தாலும் அதை சமாளிக்க எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் கருர் எஸ் நாகராசன் தலைமையில் ஒரு படை தயார் செய்து ரகசியமாக வைத்திருந்தனர்.
இருப்பினும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் உண்ணாவிரதம் அமைதியாக நடந்து முடிந்தது.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் சின்னசாமி,
இன்னும் 6 அமாவாசைக்குள் திமுக ஆட்சி கவிழம், மக்கள் பிரச்சனைக்கு கூட போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. போலீஸ் இரட்டை வேடம் போடுகின்றனர். இன்னும் சில நாட்களில் டெல்லி ஆட்சியும், அதை தொடர்ந்து தமிழகத்தில் திமுக ஆட்சியும் கவிழும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications