லஞ்சம் தந்த தொழிலபதிபர்களை போலீசாரிடம்ஒப்படைத்த கலெக்டர்
சிவகங்கை:தனது லஞ்சம் தர முயன்ற பெங்களூரைச் சேர்ந்த இரு கிரனைட் குவாரி தொழிலதிபர்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தார் சிவங்கை கலெக்டர் சித்திக்.
பெங்களூரைச் சேர்ந்த கன்ஷ்யாம், விஷால் போரா ஆகியோர் சிவகங்கை மாவட்டத்தில் குவாரி உரிமம் கோரி விண்ணப்பித்தனர். இது தொடர்பாக கலெக்டரை சந்திக்க நேரம் கோரினர்.
இதையடுத்து அவர்களை கலெக்டர் சித்திக் சந்தித்தார். அப்போது குவாரி உரிமம் கோரி அவர்கள் தந்த விண்ணப்பத்தை கனிம வளத்துறையின் உதவி இயக்குனருக்கு பரிந்துரை செய்து கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து ஒரு கவரை அவரிடம் இருவரும் தந்தனர். அதில் ரூ. 25,000 இருந்தது. அதிர்ச்சியடைந்த சித்திக் அவர்களை பக்கத்து அறையில் உட்கார வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் தந்தார்.
தனது லஞ்சம் தந்தாக புகாரும் தந்தார். இதையடுத்து போலீசார் வந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications