புலிகளுக்கு டீசல் கடத்தல்-5 மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்:விடுதலைப் புலிகளுக்கு டீசல் விற்றதாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையினரும் கூட்டு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகு இலங்கை கடல் பகுதியிலிருந்து இந்திய கடல் எல்லைக்குள் வேகமாக வந்து கொண்டிருந்ததைக் கண்டனர்.
இதையடுத்து அந்தப் படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குமார், அந்துக் கிழவன், பாக்கியராஜ், ராபர்ட், பல்தா ஆகிேயாரை கரைக்குக் ெகாண்டு வந்து விசாரித்தனர்.
அப்போது அந்தப் படகு அருளானந்தம் என்பவருக்குச் சொந்தமானது என்றும், படகில் டீசலை எடுத்துச் சென்று விடுதலைப் புலிகளிடம் கடலில் வைத்துக் கொடுத்து விட்டு வருவதாகவும் தெரிய வந்தது.
படகில் விடுதலைப் புலிகளிடமிருந்து மீனவர்கள் வாங்கிய பணமும் இருந்தது. இதையடுத்து ஐந்து பேரும் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஆனால், கைதான மீனவர் குமார் வேறு மாதிரியாக கூறுகிறார். அவர் கூறுகையில், நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த விடுதலைப் புலிகள், எங்களிடம் வந்து டீசல் கேட்டனர்.
இல்லை என்று கூறினோம். ஆனால் அவர்கள், எங்கள் பகுதிக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டு, எங்களுக்கே டீசல் இல்லை என்று சொல்கிறீர்களா என மிரட்டினர். இதையடுத்து எங்களிடமிருந்த டீசலை அவர்களிடம் கொடுத்தோம். அதற்காக ரூ. 1,500 பணத்தை அவர்கள் கொடுத்து விட்டுச் சென்றனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications