மண் பாண்டக் கிட்டங்கியில் கலர் டி.வி.க்கள்!
நெல்லை:நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட தேன்பொத்தை கிராம ஊராட்சி மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 800 கலர் டிவிக்களும் விநியோகிக்கப்படாமல் களி மண் பாண்ட கிட்டங்கியில் போட்டு வைக்கப்பட்டுள்ளன.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தேன்பொத்தை ஊராட்சி மன்ற பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு விநியோகம் செய்ய தமிழக அரசின் சார்பில் 800 கலர் டி.வி. பெட்டிகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டன.
அந்த டி.வி பெட்டிகள் அனைத்தும் இன்னும் விநியோகிக்கப்படாமல், களி மண் பாண்ட தொடக்க கூட்டுறவு சங்க கிட்டங்கியில் வைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதாம்.
அப்பகுதி மக்கள் எப்போது கலர் டி.வி கொடுப்பீர்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டால், கணக்கெடுப்பு எடுத்து முடித்த பின்பு தான் டி.வி கொடுப்போம் என்று கூறி வருகின்றனர்.
மேலும் மண் பாண்ட தொழிலாளர்களோ தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வைக்கக் கூடிய இடத்தில் கலர் டி.வி பெட்டிகளை வைத்து விட்டதால், மண் பாண்டங்களை எங்கு வைப்பது என்று தெரியாமல் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
களி மண் பாண்ட கிட்டங்கியில் காத்திருக்கும் கலர் டி.வி பெட்டிகள் பயனற்று போகும்முன் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications