அமைச்சரின் உறவினர் வீட்டுக்கு கற்களுடன்வந்த ஜெலட்டின் குச்சிகள்!
நெல்லை:அமைச்சரின் உறவினர் கட்டி வரும் வீட்டுக்கு கற்களுடன் ஜெலட்டின் குச்சிகளும் வந்திறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டவுன் குற்றாலம் ரோட்டை சேர்ந்தவர் ஷாமியா. அமைச்சர் டி.பி.எம். மைதீன் கானின் உறவினரான இவர், அப் பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக தாழையூத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இருந்து லாரி மூலம் கற்கள் கொண்டு வரப்பட்டன.
கற்களை கட்டிட தொழிலாளர்கள் எடுத்தபோது கற்களுக்கிடையே ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு துணை கமிஷ்னர் தினகரன், இன்ஸ்பெக்டர் முகமது மைதீன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி, சப்.இன்ஸ்பெக்டர்கள் குருசாமி, முருகேசன் ஆகியோர் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் கருவிகளுடன் அங்கு வந்தனர்.
அங்கிருந்த 3 ெஜலட்டின் குச்சிகளை அகற்றி பின்னர் அவற்றை திருவேங்கடநாதபுரம் அருகேயுள்ள மலையடிவாரத்திற்கு கொண்டு சென்று வெடிக்கச் செய்தனர்.
கற்களுக்குள் ஜெலட்டின் குச்சிகள் தற்செயலாக வந்ததா அல்லது ஏதேனும் சதிச் செயலா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications