இந்தியாவில் ஜப்பான் பிரதமர்-நாடாளுமன்றத்தில் உரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகின் புதிய பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்க ஜப்பான் ஆர்வமாக உள்ளதாக அந் நாட்டு பிரதமர் ஷின்ஷோ அபே கூறியுள்ளார்.

டெல்லி வந்துள்ள அபே இன்று காலை நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசுகையில்,

Shinzo abe with Manmohan Singh

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து புதிய சுதந்திரமான, திறந்த மனதுடனான, வெளிப்படையான பொருளாதர கட்டமைப்பை ஏற்படுத்த ஜப்பான் ஆர்வமாக உள்ளது.

இதன் மூலம் இந்தியா மற்றும் ஜப்பானின் பொருளாதாரம் மாபெரும் வளர்ச்சியை அடையும். எப்படி நடனக் கலைஞர்களும், இசைக் கலைஞர்களும் இணைந்து அருமையான பாடல்களையும், இசையயையும் தருகிறார்களோ அதேபோல இந்தியாவும், ஜப்பானும் இணைந்து பொருளாதார வளர்ச்சியை காண முடியும். இதன் மூலம் இரு நாடுகளிலும் பெரும் வளர்ச்சியையும் எட்ட முடியும்.

ஈரோஷியா பிராந்தியத்தில் இருப்பதைப் போன்ற வளர்ச்சிக்கான ஒரு கட்டமைப்பை இந்தப் பிராந்தியத்திலும் ஏற்படுத்துவது குறித்து ஜப்பான் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

ஜப்பானும், இந்தியாவும் இந்த நோக்கில் இணைந்து செயல்படுவதன் மூலம் அகண்ட ஆசியாவை நனவாக்க முடியும். இரு நாடுகளுடன் மட்டும் இது நில்லாமல் பசிபிக் சமுத்திர நாடுகள் முழுமைக்கும் இதைக் கொண்டு செல்ல முடியும்.

இதன் மூலம் மனித உழைப்பு, சரக்குப் பரிவர்த்தனை, பொருளாதார முதலீடுகள், அறிவுசார் தகவல்களை சுதந்திரமாக பரிமாறிக் ெகாள்ள முடியும்.

இந்திய யானைகளால் வந்த அதிர்ஷ்டம்!:

கடந்த 2001ம் ஆண்டு ஜப்பானுக்கு இந்தியா சூர்யா என்ற யானையை பரிசாக அளித்தது. அந்த யானை வந்தது முதல் ஜப்பானின் அதிர்ஷ்டம் பன்மடங்காக உயர்ந்துள்ளது.

சூர்யா 2001ம் ஆண்டு மே மாதம் ஜப்பானுக்கு வந்தபோது எங்களது நாடு பல பிரச்சினைகளை சந்தித்துக் ெகாண்டிருந்தது. ஆனால் சூர்யா வந்த பிறகு நிலைமை மாறி விட்டது.

இதேபோல முன்னாள் பிரதமர் நேரு ஜப்பானுக்கு அன்பளிப்பாக கொடுத்த இந்திரா யானையும் எங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது. இதுவரை இந்தியா சார்பில் மூன்று யானைகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அர்ஷா (நம்பிக்கை), தயா (அடக்கம்), சூரியா (சூரியன்) என்ற பெயர்களைக் கொண்ட இந்த யானைகளை நாங்கள் மறக்கவே முடியாது என்றார் அபே.

யானைகள் குறித்து அபே பேசியபோது அனைத்து எம்பிக்களும் மேசைகளைத் தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அபேயின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம், இந்தியாவுக்கு அணு சக்தி பொருட்களை சப்ளை செய்யும் பிரிவில் ஜப்பான் முக்கிய உறுப்பினராக உள்ளது.

அபே மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிேயாருக்கு இடையிலான பேச்சுவார்த்தையில், அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. ஆனால் இதை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அணு வர்த்தகத்திற்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. அதை நீக்குமாறு அபேயிடம் மன்மோகன் சிங் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது.

அபேவுடன் 200 பேர் கொண்ட உயர் மட்ட வர்த்தகக் குழுவும் உடன் வந்துள்ளது. இந்தக் குழுவில் ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான மிட்சுபிஷி, ஹிடாசி, தோஷிபா ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும், 100 பில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப்படவுள்ள டெல்லி - மும்பை தொழில் வளாக திட்டத்திற்கு அபே - மன்மோகன் சிங் சந்திப்பின்போது இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றும் அமளி-ஒத்திவைப்பு:

அபே பேசி முடித்துச் சென்ற பின் வழக்கம்போல இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அணு ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க் கட்சிகளும் இடதுசாரிகளும் பிரச்சனை கிளப்ப, அமளி ஏற்பட்டு இரு அவைகளும் வழக்கம்போல் ஒத்தி வைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+