தேமுதிக கூட்டத்தில் பெரும் ரகளை;நிர்வாகிக்கு பீர் பாட்டில் குத்து!
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நடந்த தேமுதிக கூட்டத்தில் அடிதடி, கலாட்டா, சோடா பாட்டில் வீச்சு நடந்தது. இதில் இலக்கிய அணி செயலாளர் பஞ்சுவை, பீர் பாட்டிலை உடைத்துக் குத்தினர்.
ராமநாதபுரத்தில் மாவட்ட தேமுதிக கூட்டம் தேவிப்பட்டினம் சாலையில் உள்ள அதன் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சின்னா தலைமை தாங்கினார்.
நகர ஒன்றிய அணி செயலாளர்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட செயலாளர் சின்னாவிற்கு எதிர் கோஷ்டியினர் திடீரென கூட்டத்திற்குள் புகுந்தனர்.
கூச்சலிட்டவாறு உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த சேர்களை தூக்கி வீசினர். பின்னர் சோடா பாட்டில்களை சரமாரியாக வீசினர். ராக்கெட் போல பறந்து வந்த பாட்டில்களால் அந்த இடமே ஈராக் போல காணப்பட்டது. மாவட்ட அலுவலத்தையும் அந்தக் கும்பல் சூறையாடியது.
மோதலின் உச்சகட்டமாக மாவட்ட செயலாளர் சின்னா, கலை இலக்கிய அணி செயலாளர் பஞ்சு ஆகியோர் மீது பீர் பாட்டிலை உடைத்து குத்தினர். இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.
இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். பதட்டம் நிலவியதால் அஙகு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications