ஹனீப்புடன் வேலை பார்த்த டாக்டர் டிஸ்மிஸ்
மெல்போர்ன்:தீவிரவாத தொடர்பு சர்ச்சையில் சிக்கி மீண்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப்புடன் வேலை பார்த்து வந்தவரும், அதே தீவிரவாத சர்ச்சையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவருமான டாக்டர் முகம்மது ஆசிப் அலி அவர் வேலை பார்த்து வந்த மருத்துவமனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் ஹனீப்புடன் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் ஆசிப் அலி. ஹனீப் கைது செய்யப்பட்டபோது ஆசிப் அலியும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதால் ஆசிப் அலியை விடுவித்தது ஆஸ்திரேலிய போலீஸ். இந்த நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி மருத்துவமனையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஆசிப் அலி.
வேலையில் சேருவதற்காக தனது பயோடேட்டாவில் திருத்தம் செய்ததாக கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை கண்டுபிடித்தது. இதையடுத்தே ஆசிப் அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அவரது பாஸ்போர்ட்டை ஆஸ்திரேலிய அரசு திருப்பிக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அவர் இந்தியா திரும்பி விட்டார்.
இந்த நிலையில்தான் அலியை தற்போது கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. தனது தவறை அலி ஒத்துக் கொண்டதால் அவரை பணியிலிருந்து நீக்கி விட்டது கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம்.
இதுகுறித்து க்வீன்ஸ்லாந்து சுகாதாரத் துறை இயக்குநர் உஸ்சி ஸ்ரைபர் கூறுகையில், டாக்டர் அலியின் குணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரது மருத்துவ தகுதியைக் குறைத்து நாங்கள் மதிப்பிடவில்லை.
தவறான வழியில் டாக்டர் அலி பணியில் சேர்ந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார் ஸ்ரைபர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications