ஆந்திராவில் நாளை பந்த் - பாஜக
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நாளை பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஹைதராபாத்தில் நடந்த இரட்டை வெடிகுண்டுச் சம்பவம் நடந்த பகுதிகளை மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்ற நாளிலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக குண்டுவெடிப்பு சம்பவங்களும், தீவிரவாத செயல்களும் அதிகரித்துவிட்டன.
குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாத செயல்கள் போன்றவற்றுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்று கூறினார்.
இதற்கிடையில் நாளை ஆந்திராவில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications