30ம் தேதி வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 30ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

Vadapalani

இதுகுறித்து கோவில் விவகாரக் குழுத் தலைவரும், மறைந்த சீர்காழி செளந்தரராஜனின் புதல்வருமான சீர்காழி ஜி.சிவசிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆகஸ்ட் 30ம் தேதி காலை 8.30 மணியிலிருந்து 9.20 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். இதில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

கோவிலைப் புதுப்பிக்கும் பணிகள் ரூ. 2 கோடி செலவில் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கொடுத்த நன்கொடை நிதியிலிருந்து செலவுகள் செய்யப்பட்டுள்ளன.

Vadapalani

கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் பட வேண்டும் என்பதற்காக ஸ்பிரிங்க்ளர்களை பயன்படுத்தவுள்ளோம்.

கடந்த டிசம்பரில் புனரமைப்புப் பணிகள் தொடங்கின. அனைத்து சன்னதிகளும், மண்டபங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

22 அடி உயர கொடி மரம் மற்றும் அனைத்துக் கலசங்களும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன என்றார் சிவசிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+