கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர்பாறை இடையே பாலம் கட்ட பரிந்துரை
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே பாலம் கட்டுவது குறித்து தமிழக அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் முல்லைவேந்தன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
கன்னியாகுமரி பழத் தோட்டம் மற்ற இடங்களில் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஒரு முன் மாதிரி பழத்தோட்டமாக இருந்து வருகிறது. திருவள்ளுவர் சிலை பராமரிப்பு ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இது குறித்து பரீசிலிக்கப்படும்.
திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்தை அரசுக்கு தெரிவிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications