நடிகையாக்குவதாக கூறி விபச்சாரத்தில்பெண்களைத் தள்ளிய 4 பேர் கைது
சென்னை: நடிகை வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் சமீப காலமாக ஆங்காங்கு வேட்டை நடத்தி விபச்சாரம் செய்வோர் மற்றும் அவர்களை ஈடுபடுத்துவோரைப் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேடவாக்கம் பகுதியில் விபச்சாரம் விறுவிறுப்பாக நடப்பதாக விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மேடவாக்கம் பகுதியை விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் முற்றுகையிட்டனர்.
மேடவாக்கத்தில் விபச்சாரம் நடக்கிறது என்று பொதுவான தகவல் கிடைத்ததால், எந்த இடத்தில் என்று சரியாக தெரியவில்லை. இதனால் மேடவாக்கத்தை அப்படியே ரவுண்ட் அடித்தபடி இருந்தனர்.
அந்த சமயத்தில், சோழிங்கநல்லூர் செல்லும் சாலையில் ஒரு வாலிபர் தன் மோட்டார் சைக்கிளில் இளம்பெண் ஒருவருடன் வந்தார். பின்னர் அந்தப் பெண்ணை சாலையின் இன்னொரு பகுதியில் நின்று கொண்டிருந்த இன்னொரு வாலிபரிடம் இறக்கி விட்டு விட்டு பணம் பெற்றார். பின்னர் பறந்தார்.
இதைப் பார்த்த போலீஸார் அந்தப் பெண் மற்றும் காத்திருந்த வாலிபரை அணுகினர். விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் பர்வீன், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. விபச்சாரத்தில் அவர் ஈடுபடுத்தப்பட்டது தெரிய வந்தது.
23 வயதாகும் பர்வீனை, சினிமாவில் நடிப்பதாக கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். அக்பர் அலிதான் இதற்குக் காரணம் என்றும் போலீஸாரிடம் தெரிவித்தார் பர்வீன்.
இதையடுத்து பர்வீனை இறக்கி விட்டு விட்டுச் சென்ற வாலிபரைப் பிடிக்க போலீஸார் விரைந்தனர். அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் மேடவாக்கம் புதுநகர் பகுதியில் வீட்டில் விபச்சாரம் செய்து வந்த மல்லிகா (23), புரோக்கர் அக்பர் அலி (39) மற்றும் செல்வம் (27), முருகன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அக்பர் அலியால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணையும் போலீஸார் மீட்டனர்.
அக்பர் அலி குண்டர் சட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு முறை கைது செய்யப்பட்டவர். இதுதவிர விபச்சார வழக்கிலும் பலமுறை கைதாகி உள்ளே போய் வெளியே வந்தவர்.
சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளுவது அலியின் ஸ்டைலாம். கைதான செல்வம் மற்றும் மல்லிகா இருவரும் கணவன், மனைவியாம். ஜோடியாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பணம், 4 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் பர்வீன், சுப்புலட்சுமி இருவரும் மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications