போலி வாடகை ரசீதுகளுக்கு வருகிறது ஆப்பு!
டெல்லி:வீட்டு வாடகை ரசீதில் இனிமேல் பான் (PAN) எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படவுள்ளது.
தற்போது பெரும்பாலானோர் போலியான வாடகை ரசீதுகளைக் கணக்கில் காட்டி வருகின்றனர். இதனால் உண்மையான வாடகை தொகையை அவர்கள் தெரிவிக்காமல் ஏமாற்றுவதாக வருமான வரித்துறை கருதுகிறது.
வாடகைக்கு வீடுகளை விடுவோர் அந்த வாடகைத் தொகையையும் தங்களது வருமான வரிக் கணக்கில் காட்ட வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அதைக் காட்டுவதில்லை.
இப்படி இரு தரப்பிலும் உண்மையான தொகை மறைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் வாடகைக்கு வீடு விடுவோரும், வாடகை கட்டுவோரும் இனிமேல் தங்களது ரசீதில், பான் (PAN) எண் குறித்த விவரங்களைக் காட்டியாக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து வருமான வரி நிபுணர் கிரீஷ் அஹுஜா கூறுகையில்,
தங்களது ஊழியர் தரும் வாடகை ரசீதில் இடம் பெறும், வீட்டு உரிமையாளர் மற்றும் ஊழியரின் பான் (PAN) எண் விவரங்களை நிறுவனங்கள் பரிசோதிக்கும். இதன் மூலம் உண்மையான வாடகை விவரம் தெரிய வரும் என்றார்.
2007-08ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் படிவத்தில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் தங்களது பான் விவரங்களைத் தெரிவிக்குமாறு நிதித்துறை அமைச்சகம் கோரியிருந்தது. இந்த ஆண்டு இது ஆப்ஷனல் என்றாலும் கூட அடுத்த ஆண்டிலிருந்து கண்டிப்பாக இதைக் குறிப்பிட வேண்டும்.
எனவே வாடகைக்கு குடியிருப்போரும், வீட்டு உரிமையாளர்களும் இனிமேல் உண்மையான வாடகையைத் தெரிவித்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகைப் பணத்திற்கான ரசீதே தருவதில்லை என்று மாதச் சம்பளம் பெரும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் புலம்புகின்றனர்.
இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பு, வீட்டு வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள் முறையாக ரசீதுகளைத் தருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னரே பான் (PAN) எண் விவரங்கள் குறித்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications