சென்னையில் அழகிரி: தா.கி கொலைவழக்கு குறித்து ஆலோசனை?
சென்னை:தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆந்திராவுக்கு மாற்றப்பட்டுள்ளதன் பின்னணியில் அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வரின் மகன் மு.க. அழகிரி சென்னை வந்துள்ளார். வழக்கு மாற்றம் குறித்து விவாதிக்கவே அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை உலுக்கிய சம்பவம் முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு. மதுரையில் தனது வீட்டருகே காலையில் வாக்கிங் சென்ற அவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் கிருட்டிணன். எனவே அவரை அழகிரியின் ஆதரவாளர்கள்தான் கொன்று விட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். எனவே வழக்கு மதுரையில் நடந்தால், நியாயம் கிடைக்காது, சாட்சிகளின் உயிர்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி முக்கிய சாட்சியான முத்துராமலிங்கம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றி அதிரடி தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், மு.க.அழகிரி நேற்று மதுரையிலிருந்து சென்னை வந்தார். வழக்கு மாற்றம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவே அவர் சென்னைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications