சங்கிலித் திருடனை சரமாரியாக அடித்துஉதைத்த போலீஸ், பொது ஜனம்!
பீகார்:பீகார் மாநிலத்தில் பெண்ணிடம் சங்கிலி திருடிய நபரை, போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து காட்டுத்தனமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
![]() |
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு நபர் சங்கிலி பறித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் சேர்ந்து பிடித்தனர்.
பின்னர் அந்த நபரின் கைகளை முதுகில் கட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆளாளுக்கு கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்தது போலீஸ்.
![]() |
பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்பதற்குப் பதிலாக போலீஸாரும் சேர்ந்து அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த திருடனை ஒரு பைக்கில் கட்டினர். பின்னர் அந்த பைக்கை ஒரு போலீஸ்காரர் ஓட்டிச் சென்றார். அந்த பரிதாபத்துக்குரிய திருடனோ, தரையில் உரசியபடி பரிதாபமாக இழுத்துச் செல்லப்பட்டார்.
திருடனிடமிருந்து சங்கிலியை மீட்ட பின்னரும் கூட, அந்த நபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து பீகார் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் அனில் சின்ஹா கூறியுள்ளார்.
பீகார் மாநில உள்துறைச் செயலாளர் அப்சல் அமானுல்லா கூறுகையில்,
பைக்கில் திருடனைக் கட்டி தெருவில் இழுத்துச் சென்ற போலீஸ்காரரிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றார். அந்த காவல்துறை அதிகாரி ஒரு சப் இன்ஸ்பெக்டர் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து முன்னாள் பீகார் முன்னாள் முதல்வரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், பீகாரில் காட்டாட்சி நடக்கிறது. அதற்கு இது சரியான உதாரணம்.
இந்த சம்பவம் மிகவும் வெட்கக் கேடானதாகும். சிறிய திருட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் கொலை முயற்சிக்கு சமமானது.
நிதிஷ்குமார் தலைமையிலான அரசு சட்டம், ஒழுங்கை கடைபிடிக்க தவறிவிட்டது என்று லாலு கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!















Click it and Unblock the Notifications