நடிகை சரஸ்வதி கூட்டத்தில் திமுகவினர் ரகளை
திருவிடைமருதூர்:நடிகை சி.ஆர்.சரஸ்வதி கலந்து கொண்டு பேசிய அதிமுக கூட்டத்தில் திமுகவினர் புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
பாக்யராஜ் கட்சி நடத்தியபோது அதில் முக்கிய தலைவியாக இருந்தவர் சரஸ்வதி. பின்னர் மதிமுகவுக்குப் போய் இப்போது அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
இந் நிலையில் திருவிடைமருதூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது.
இக் கூட்டத்திற்கு சோழபுரம் நகர செயலாலர் ஆசாஷ் அலி தலைமை தாங்கினார். அதிமுக பேச்சாளரும், நடிகையுமான சி. ஆர். சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சின்னையன் என்பவர் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த ஒரு கும்பல் அப் பகுதியில் கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுக்களை உருட்டுக்கட்டைகளால் அடித்து உடைத்து.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரகளையில் ஈடுபட்டவர்களை அதிமுகவினர் பிடிக்க முயன்றனர். அவர்களையும் கட்டையால் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் அதற்குள் தப்பி ஓடி விட்டது.
இதுகுறித்து அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
ரகளையில் ஈடுபட்ட திமுகவினரை உடனடியாக கைது செய்யக் கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி ரொசரியோ, திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததயைடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications