சல்மான் ஜாமீன் மனு: விசாரிக்க நீதிபதி மறுப்பு!
ஜோத்பூர்:நடிகர் சல்மான் கான் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை விசாரிக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி வியாஸ் மறுத்து விட்டார். இதையடுத்து இதன் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
![]() |
சிங்காரா என்ற அரிய வகை மான்கள் இரண்டை வேட்டையாடிக் கொன்ற வழக்கில், சல்மான் கானுக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை சமீபத்தில் ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து சல்மான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சார்பில் ஜாமீன் கோரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வியாஸ், இந்த மனுவை நான் விசாரிக்க மாட்டேன் என்று கூறி சென்று விட்டார். இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.
இந் நிலையில், சல்மான் கான் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது மனு நாளை எப்போது விசாரணைக்கு வரும் என்பதை நீதிமன்றப் பதிவாளர் முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தாலும் கூட உடனடியாக அவரால் விடுதலையாகி வெளியே வர முடியாது என்றே தெரிகிறது. நீதிமன்ற உத்தரவின் நகல் ஜோத்பூர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். நாளைக்குள் இது நடந்தாக வேண்டும்.
காரணம், வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் வக்கீல்கள் ஸ்டிரைக் நடக்கிறது. இதனால் நீதிமன்றங்கள் செயல்படாது என்று தெரிகிறது. மேலும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் நீதிமன்றம் விடுமுறையாகும்.
எனவே இப்போதைக்கு சல்மான் விடுதலையாகி வெளியே வருவது இயலாது என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications