அதிமுக மாஜி மந்திரி வளர்மதி, உறவினர்கள்வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மொத்தம் 12 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது.

Valarmathi

கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் வளர்மதி. இவரது சொந்த ஊர் மதுரை. தற்போது அதிமுக மகளிர் அணி செயலாளராக இருக்கிறார் வளர்மதி.

இப்போது சென்னை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந் நிலையில் இன்று காலை சென்னை கே.கே.நகரில் உள்ள வளர்மதியின் வீட்டுக்கு டி.எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையிலான 7 போலீஸார் சோதனையைத் தொடங்கினர்.

வளர்மதியை மட்டும் வீட்டுக்குள் வைத்து பூட்டிக் கொண்டு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சகோதரர்கள் வீடுகளிலும்..

வளர்மதியின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம் மற்றும் மதுரை உட்பட 11 இடங்களில் உள்ள அவரது உறவினர்கள், பினாமிகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் தீவிர சோதனை நடந்தது.

வளர்மதியின் வீட்டுக்கு அருகே உள்ள அவரது சகோதரர் பொற்செழியனின் வீட்டிலும், சேலையூரில் இருக்கும் வளர்மதியின் தம்பி, உறவினர் நடன காசிநாதன் ஆகியோர் வீடுகளிலும் போலீஸார் ரெய்டு நடத்தினர்.

10 ஏக்கரில் பண்ணை வீடு:

சென்னையை அடுத்து நாவலூரில் வளர்மதிக்குச் சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவிலான பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்தது.

கேளம்பாக்கம், தாழம்பூரில் உள்ள வளர்மதியின் மாமா வடிவேலு,சிதம்பரத்தில் உள்ள வளர்மதியின் நாத்தனார் மணிமொழி ஆகியோரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

மாமா, நாத்தனார்:

அதே போல வளர்மதிக்கு நெருக்கமான கே.கே.நகரில் வசிக்கும் நாராயணன், வளசரவாக்கத்தில் வசிக்கும் சிதம்பரம், குரோம்பேட்டை நாகல்கேணியை சேர்ந்த அதிமுக பிரமுகர் தனசிங்கின் வீடு ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடந்தன.

டீச்சர்ஸ் இன்ஸ்டிட்யூட்டில்..

பல்லாவரம் நகரசபை முன்னாள் தலைவர், எஸ்.பி. நாச்சியப்பனின் வீடு, மதுரை ஐயப்பா நகரில் வசித்து வரும் பாண்டியனின் வீடு மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விக்டரி டீச்சர்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

ஒத்தக்கடை பாண்டி:

ேமலும் மதுரை ஒத்தக்கடையில் உள்ள வளர்மதியின் உறவினர் பாண்டி வீட்டிலும் ரெய்டு நடந்தது.

இதுதவிர வளர்மதிக்குத் தொடர்புடைய பல்லாவரம், சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளிலும் ரெய்ட் நடந்தது.

அமைச்சாரகும் முன் மிகச் சாதாரணமானவராக வளைய வந்த வளர்மதிக்கு இப்போது ஏகத்துக்கும் சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+