திருச்சியில் மூட்டை மூட்டையாகஜெலட்டின் குச்சிகள் மீட்பு - ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சி துவாக்குடியில், மூட்டை மூட்டையாக வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
துவாக்குடியில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் ஏராளமான வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிட்டங்கியில் 18 மூடைகளில் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த வெடிபொருட்களை வைத்திருப்பதற்கு உரிய அனுமதியை நடராஜன் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடராஜனை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications