ரெட் எப்.எம்பின் 49% பங்குகள் சன் டிவி வசம்!
டெல்லி:வட இந்தியாவில் செயல்பட்டு வரும் ரெட் எப்.எம். வானொலியில் 48.9 சதவீத பங்குகளை சன்டிவி குழுமம் வாங்கியுள்ளது. சன் டிவியின் துணை நிறுவனமான தெற்காசிய எப்.எம். நிறுவனம் மூலம் இந்த பங்கு மாற்றம் நடந்துள்ளது.
ரெட் எப்.எம். நிறுவனத்தின் கணிசமான பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளதன் மூலம் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் தனது எப்.எம். சேவையை விரிவாக மேற்கொள்ளவுள்ளது சன் டிவி.
ரெட் எப்.எம். நிறுவனத்தின் புரமோட்டர்களான உஷா ரெட்டி, அர்ஜூன் ராவ் ஆகியோர் தொடர்ந்து 51.1 சதவீத பங்குகளை தங்கள் வசம் வைத்திருப்பார்கள். ரெட் எப்.எம். நிறுவனம் என்டிடிவியுடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பங்கு மாற்றத்திற்குப் பதிலாக ரெட் எப்.எம். நிறுவனமும், என்டிடிவி நிறுவனமும், தெற்காசிய எப்.எம். நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை தங்கள் வசம் வைத்துக் கொள்ளும். மீதமுள்ள தெற்காசிய எப்.எம். நிறுவனத்தின் பங்குதாரர்கள் தங்கள் வசம் தொடர்ந்த வைத்திருப்பார்கள்.
தெற்காசிய எப்.எம். நிறுவனத்திடம் இந்தியா முழுவதும் (தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா தவிர) 23 எப்.எம். ரேடியோ உரிமங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த நிறுவனம் ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வரில் இரு ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications