போலி முத்திரை தாள் வழக்கு-முகம்மது அலி உட்பட 11 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
சென்னை:போலி முத்திரைதாள் மோசடி வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஐஜி முகமது அலி உள்பட 11 பேர் மீது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
![]() |
போலி முத்திரைதாள் மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கில் முக்கிய குற்றவாளி அப்துல்கரீம் தெல்கி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முன்னாள் டிஐஜி முகமது அலி, டிஎஸ்பி சங்கர், எல்.ஐ.சி. ஏஜெண்டு ராமசாமி சாது, அலிக்கும் தெல்கிக்கும் இடையே பாலமாக செயல்பட்ட நிஜாமுதீன், நிஜாமுதீன் மனைவி நஷ்ரீன் உள்பட 11 பேரை சிபிஐ கைது செய்தது.
அவர்கள் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தெல்கி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புனே சிறையில் உள்ள என்னிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடைபெற்று வருவதை எதிர்த்து நான் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே அந்த வழக்கு விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிற்பகலில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சர்ப்ராஸ் நவாஸ், பாலாஜி ஆகியோரை பெங்களூர் போலீசாரும், பீட்டர் கென்னடி என்பவரை சென்னை போலீசாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பிற்பகலில் ஆஜர்படுத்தினர்.
புனே சிறையில் இருக்கும் தெல்கி உட்பட 3 பேர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராயினர். நீதிபதி வேலு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை படித்த பின்பு, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.
தெல்கி தரப்பில் ஆஜரான வக்கீல் சி.எஸ்.எஸ்.பிள்ளை தமிழநாட்டில் தொடரப்பட்ட வழக்கில் தெல்கியையும், சர்ப்ராஸ் நவாஸையும் கைது செய்த தேதியினை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை. அதனால் அந்த விவரங்களை சிபிஐ தெரிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வழக்கை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி வேலு, சர்ப்ராஸ் நவாஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் வரும் செப்டம்பர் 12ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். இந்த வழக்கில் அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப்பட்ட நாள், முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தொடர்பான அனைத்து விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி வேலு உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications