மதுரை டூ கொடைக்கானல்: விரைவில் ஹெலிகாப்டர் சேவை!

Subscribe to Oneindia Tamil

மதுரை:மலைகளின் இளவரசியான கொடைக்கானல்-மதுரை இடையே ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படவுள்ளது.

Helicopter

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரத்திற்கும், கொடைக்கானலிலிருந்து ஹெலிகாப்டர் சேவை மேற்ெகாள்ளப்படவுள்ளது.

கொடைக்கானலிலிருந்து தென் தமிழகத்தின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை மேற்ெகாள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் சேவையை பவன் ஹன்ஸ் நிறுவனம் நடத்தவுள்ளது. முதல் கட்டமாக கொடைக்கானலிலிருந்து மதுரைக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படுள்ளது. படிப்படியாக ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இது விரிவுபடுத்தப்படவுள்ளது.

கொடைக்கானலில் இதற்காக ஹெலிபேட் தளத்தை அமைக்கும் பணியில் பவன்ஹன்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. ஹெலிபேட் அமைப்பதற்காக பல இடங்கள் பார்க்கப்பட்டன. கடைசியில் ஆட்டுவம்பட்டி என்ற இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.

ஆட்டுவம்பட்டியில் உள்ள வருவாய்த்துறைக்குச் சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் ஹெலிபேட் அமைக்கப்படவுள்ளது. விரைவில் ஹெலிபேட் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+