நெல்லை கடற்படை தளத்தில் ஊடுருவிய மர்மநபர்: மனநல சோதனை-ஐ.பி. விசாரணை
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் தளம் உள்ளது. நேற்றிரவு அங்கு ஒரு மர்ம நபர் ஊடுருவினார்.
அவரை கடற்படை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
அவர் ஆந்திர மாநிலம் மதக் மாவட்டம் சித்திபேட்டையைச் சேர்ந்த நரசிங்கமூர்த்தி மகன் கனகய்யா (28) என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் அவரை விஜயநாராயணம் காவல் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
அவரிடம் மாவட்ட எஸ்.பியும் விசாரணை நடத்தினார். சம்பந்தமில்லாமல் பேசும் அவர் மனநோயாளியாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
உண்மையிலேயே அவர் மனநோயாளியா என்பதை அறிய இன்று காலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் அவரை நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரிடம் மத்திய உளவுப்பிரிவான ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications