சென்னையில் பரவும் லெப்டோ ஸ்பைரோசிஸ்!
சென்னை: சென்னை மாநகரில் எலிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர்.
லெப்டோ ஸ்பைரோசிஸ் என்று சொல்லக் கூடிய இந்த காய்ச்சல், நாய், பூனை, எலி, மாடு, ஆடு போன்றவற்றின் மலம், சிறுநீர் ஆகியவற்றிலிருந்து உருவாகும் நோய் கிருமியால் வருகிறது.
தங்கள் உடம்பில் இருக்கும் காயங்கள், சிறு கீறல்கள் வழியாகவும் இந்த கிருமி உடலுக்குள் நுழைந்து விடும்.
உடம்பில் சிறு காயமோ, சிரங்கோ இருந்தால் அதனை சுத்தம் செய்து பாதுகாப்போடு இருக்க வேண்டும். இந்த நோய் வந்தவர்களுக்கு கடுமையான காய்ச்சலுடன் தலைவலி, உடம்பு வலியுடன் வாந்தியும் ஏற்படும். சிலருக்கு தோலில் தழும்பு கூட ஏற்படும்.
எலி காய்ச்சல் தொற்று நோய் கிடையாது. ஆனால் நாம் சுற்றுப்புறத்தை பாதுகாப்போடு வைத்து கொள்வதுடன், நாமும் சுத்தமாக இருந்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை அரசு மருத்துவமனைகளில் எவரும் அனுமதிக்கப்படவில்லையாம். ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக தண்டையார்பேட்டை, பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் கொடுங்கையூர் ஆகிய இடங்களில் இந்நோய் அதிகம் பேரை பாதித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications