கப்பலில் கடத்தப்படவிருந்த 2,000 மூட்டை ரேசன் அரிசி!
தூத்துக்குடி:வெளி மாநிலங்களுக்கு மட்டுமே கடத்தப்பட்டு வந்த தமிழக ரேஷன் அரிசியை முதன் முதலாக வெளிநாட்டுக்கு கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2000 மூட்டை ரேஷன் அரிசி பறிமூதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கரடிக் கத்து கத்தியும் கூட இதுவரை அரிசிக் கடத்தலை முழுமையாக தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை.
இடையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரிசிக் கடத்தல் குறித்து கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து சில நாட்கள் அரிசிக் கடத்தல்காரர்களைப் பிடிக்க வேட்டை நடந்தது. ஆனால் லாரிகளையும், அரிசி மூட்டைகளையும்தான் அதிகம் பிடித்தனர். பிடிபட்ட ஆட்களின் எண்ணிக்கை அந்த அரிசி மூட்டைகளை விட வெகு குறைவுதான்.
இந்த நிலையில், தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்குக் கடத்துவதற்கான முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்னர்.
தூத்துக்குடி அருகே உள்ள மீன் வளக்கல்லூரிக்கு எதிரில் கிட்டங்கி ஒன்று உள்ளது. இந்த கிட்டங்கியில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார் தலைமையில் உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2,000 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதிகாரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியின் மதிப்பு ரூ.35 லட்சமாகும்.
இது தொடர்பாக அந்த கிட்டங்கியில் இருந்த சேலத்தை சேர்ந்த டிரைவர் மணி, கிளீனர் காசி, குடோன் வாட்ச்மேன் கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குடோன் உரிமையாளர் உட்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட அரிசி மூடைகள் அனைத்தும் கப்பலில் வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல வைக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து இதுநாள் வரை அண்டை மாநிலங்களுக்கு மட்டும் கடத்தி வந்த ரேசன் அரிசி, இந்த சோதனை மூலம் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications