பெரியகுளம் அருகே விபத்து: 5 பேர் பலி
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம், கோவில் பாப்பாக்குடியை சேர்ந்த 4 பேர் நேற்று காலை தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர்கள் தேவதானப்பட்டியை அடுத்துள்ள பரசுராமபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும்போது, வத்தலக்குண்டிலிருந்து பெரியகுளம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் சிக்கிய கார் அப்பளமாக நொறுங்கியது.
இதில் மதுரை சாந்தி நகரை சேர்ந்த காரை ஓட்டி வந்த தீனதயாளன், கோவில் பாப்பாக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம், கிட்டு, பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துப்பாண்டி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications