புழலேரியில் சேற்றில் சிக்கி 3 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புழலேரியில் குளித்த மூன்று மாணவர்கள் சேற்றில் சிக்கி பலியாயினர்.
அம்பத்தூரைச் சேர்ந்த சகோதரர்கள் அரவிந்தன்(15), அன்பு குமார்(13), உறவினரான சதீஷ் ஆகியோர் (17) புழலேரிக்கு குளிக்கச் சென்றனர்.
ஆழமான பகுதிக்கு நீந்திச் சென்ற சதீஷ் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்ற அரவிந்தனும், அன்புக் குமாரும் முயற்சித்தனர். ஆனால் அவர்களும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் மூவரும் மூச்சுத்திணறி பலியாகிவிட்டனர்.
அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு படையினர் வந்து பொதுமக்கள் உதவியுடன் மூவரின் உடல்களையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications