பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்புbr/29 பேர் பலி - 60 பேர் காயம்
ராவல்பிண்டி:
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று காலை நடந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 29 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள நகரம்தான் ராவல்பிண்டி. இங்கு இன்று காலை அணு சக்தி ஆணைய அலுவலர்களை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது.
இதில் அந்தப் பேருந்து முற்றிலும் தீக்கிரையானது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவம் நடந்த சில விநாடிகளில் பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் குண்டு வெடித்தது. இதில் 17 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
இரு சம்பவங்களிலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களால் பாகிஸ்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
அல்கொய்தா தீவிரவாதிகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications