பட்டங்களில் கையெழுத்துப் போட்டார் அன்புமணி!
டெல்லி:
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று கையெழுத்துப் போட்டார்.
எய்ம்ஸ் மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களில் எய்ம்ஸ் தலைவர் என்ற முறையில் அமைச்சர் அன்புமணி ராமதாஸும் கையெழுத்திட வேண்டும். ஆனால் எய்ம்ஸ் பதிவாளர் நியமனம் தொடர்பாக அன்புமணிக்கும், எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் வேணுகோபாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக வேணுகோபால் அனுப்பிய பட்டச் சான்றிதழ்களில் கையெழுத்திடவில்லை அன்புமணி. இதையடுத்து சமீபத்தில் மாணவர்களும், டாக்டர்களும் அதிரடியாக ஸ்டிரைக்கில் குதித்தனர்.
பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் ஸ்டிரைக் வாபஸானது. இந்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் பட்டச் சான்றிதழ்களில் அன்புமணி கையெழுத்திட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று தன்னிடம் அனுப்பப்பட்ட அனைத்துப் பட்டச் சான்றிதழ்களிலும் அன்புமணி கையெழுத்திட்டார். கையெழுத்திடப்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications