கல்யாணம் நின்றதால் மன நலம்br/பாதிக்கப்பட்ட பாக்யலட்சுமி!
திருநெல்வேலி:
வைகோ காரில் அரிவாளுடன் ஏறி சர்ச்சையை ஏற்படுத்திய இளம் பெண் பாக்யலட்சுமி, திருமணம் நடக்காமல் நின்று போனதால், மன நலம் பாதிக்க
ப்பட்டவர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரை வந்த வைகோ, ரயில் நிலையத்திற்கு வெளியே காரில் ஏற வந்தபோது அந்தக் காருக்குள் அரிவாளுடன் அமர்ந்திருந்தார் ஒரு இளம் பெண். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவரை மதிமுகவினர் ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் பாக்யலட்சுமி என்றும், நெல்லை மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
திருவனந்தபுரத்தில் நர்ஸாகப் பணியாற்றி வந்த அவர் பின்னர் அந்த வேலையிலிருந்து நீக்கப்பட்டார். சென்னையில் புதிய வேலையில் சேருவதற்காக நெல்லையிலிருந்து மதுரை வந்துள்ளார். வந்தஇடத்தில்தான் வைகோ காரில் ஏறி அமர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்.
பாக்யலட்சுமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நாசரேத் போலீஸார் பாக்யலட்சுமி குறித்த முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளனர்.
நாசரேத் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாக்யலட்சுமி. அவரது தந்தை பெயர் இசக்கிமுத்து. பாக்யலட்சுமிக்கு நான்கு சகோதரர்கள். அதில் ஒருவர் இறந்து விட்டார். இருவர் சென்னையில் வசித்து வருகின்றனர். இன்னொருவர் சங்கரன்கோவிலில் இருக்கிறார். பாக்யலட்சுமியின் தங்கை கோவையில் வசித்து வருகிறார்.
பாக்யலட்சுமி பிளஸ்டூ முடித்த பின்னர் ராஜபாளையம் அருகே பெருமாள்பட்டியில் நர்சிங் படிப்பை முடித்தார். பிறகு சென்னையிலும், நெல்லையிலும் நர்ஸ் ஆக பணியாற்றினார்.
இவருக்கும், சின்னமாடன்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுளுக்கு முன்பு கல்யாணம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் மாப்பிள்ளை படிக்காதவர் என்பதால் கல்யாணம் வேண்டாம் என்று பாக்யலட்சுமி கூறி விட்டார். இதனால் கல்யாணம் பாதியில் நின்று போனது.
இதுதொடர்பாக குடும்பத்தினர் பாக்யலட்சுமியை திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்தார் பாக்யலட்சுமி. அந்த வேதனையில் அவரது மன நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்தான் வைகோ மதுரை வந்த நாளுக்கு முதல் நாள் மதுரை செல்வதாக தனது தாயார் தங்கரதியிடம் கூறி விட்டு மதுரைக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டது.
பாக்யலட்சுமி மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதியாகியுள்ளதால் அவரை மன நல மருத்துவமனையில் சேர்க்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், அவரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications