டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்;br/அன்புமணிக்கு மறுபடியும் சிக்கல்!
டெல்லி:
எம்.பி.பி.எஸ். மாணவர்கள் அனைவரின் பட்டச் சான்றிதழ்களிலும் கையெழுத்துப் போடாதது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய மருத்து விஞ்ஞானக் கழக இயக்குநர் டாக்டர் வேணுகோபாலுக்கும், அந்த கழகத்தின் தலைவர் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் அன்புமணிக்கும் இடையே பெரும் பனிப் போர் நடந்து வருகிறது.
இந்த பனிப் போரின் விளைவாக எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பட்டச் சான்றிதழ்களில் கையெழுத்துப் போடாமல் வைத்திருந்தார் அன்புமணி.
இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக டாக்டர்களும் ஸ்டிரைக்கில் இறங்கினர். இதனால் 3 நாட்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஸ்தம்பித்துப் போனது.
பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பட்டச் சான்றிதழ்களில் அமைச்சர் அன்புமணி கையெழுத்திட உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 24 மணி நேரத்திற்குள் பட்டச் சான்றிதழ்களில் கையெழுத்திட வேண்டும் என அன்புமணிக்கு உத்தரவிட்டது.
அதன்படி 49 மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களில் அன்புமணி கையெழுத்திட்டார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அனைத்து மாணவர்களின் பட்டச் சான்றிதழ்களிலும் அமைச்சர் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பட்டச் சான்றிதழ்களில் கையெழுத்திடாதது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு அன்புமணிக்கு நோட்டீஸ் அ
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications