மதுரையில் பாமக பேனர்கள் அதிரடியாக அகற்றம்
மதுரை:
மதுரையில் பாமகவின் விளம்பர பலகைகளை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த விளம்பரப் பலகைகள் விவகாரத்தைக் கிளப்பியதே பாமக நிறுவன ராமதாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுவது தொடர்பாக மதுரை கலெக்டர் ஜவஹர், போலீஸ் கமிஷ்னர் நந்தகோபால், மாநகராட்சி ஆணையர் தினகரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து போலீஸாரின் துணையுடன் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விளம்பர பலகைகளை அகற்றிய வண்ணம் உள்ளனர். இந் நிலையில் பாமக சார்பில் வைக்கப்பட்டு இருந்த வாழ்வுரிமை மாநாடு டிஜிட்டல் பேனர்களையும் அதிகாரிகள் அகற்ற முயன்றபோது பாமகவினர் அங்கு வந்து குவிந்தனர்.
கலைஞர் டிவி விளம்பரம் உள்பட, பல விளம்பர பலகைகள் இருக்கும் போது ஏன் பாமக பேனரை மட்டும் அகறிற்றுகிறீர்கள் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். அவர்களுடன் போலீசார் சமாதானம் பேசினர்.
ஆனாலும் அதை அவர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து பாமக மூத்த தலைவர்களிடமிருந்து அவர்களுக்கு சில உத்தரவுகள் வரவே அவர்கள் கலைந்து சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications