பிஸ்கட் கொள்ளையர்கள் கைவரிசைbr/ஒரிசா பயணியிடம் ரூ. 30,000 அபேஸ்
சென்னை:
எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரிசா பயணிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பணத்தைத் திருடும் கும்பல், ரூ. 30 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டது.
சென்னை வரும் ரயில்களில் அவ்வப்போது மயக்க பிஸ்கட் கொடுத்து பொருட்கள், நகை, பணத்தைத் திருடும் கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. சில நாட்களாக மறைந்திருந்த இந்த திருட்டுக் கும்பல் மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.
ஒரிசாவைச் சேர்நதவர் பாபு என்கிற ஊத் பகத்கர் தாஸ். இவர் எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது, மயங்கிய நிலையில் கிடந்தார் பாபு.
இதையடுத்து அவரை மீட்ட ரயில்வே போலீஸார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த பாபு, தான் வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் பணத்தைக் காணவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், தன்னுடன் வந்த சகோதரரையும் காணவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்தார். செப்டம்பர் 4ம் தேதி தானும், தனது சகோதரரும் ரயிலில் ஏறியதாகவும், அவர்களுடைய பெட்டியில் 2 பேர் பயணித்ததாகவும், தங்களுக்கு சாப்பிட பிஸ்கட் கொடுத்ததாகவும் பாபு கூறினார்.
பிஸ்கட்டை சாப்பிட்ட பின்னர் தான் மயங்கி விட்டதாக பாபு தெரிவித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் காணாமல் போய் விட்ட பாபுவின் சகோதரர் மற்றும் மயக்க பிஸ்கட் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications