அம்பேத்கர் சிலை அகற்றம்;br/விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

Subscribe to Oneindia Tamil


செஞ்சி:

செஞ்சி அருகே அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு சீல் வைக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் செஞ்சி தாலுகா அலுவகம் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செஞ்சியை அடுத்துள்ளது மேல் அருங்குணம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் முறையான அனுமதி பெறாமல் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைக்கு திறப்பு விழாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு செஞ்சி தாசில்தார் சேகர் தலைமையில் போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை சாக்குத் துணியால் கட்டி சீல் வைத்தனர்.

இதைக் கண்டித்து விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் செஞ்சி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாக்கினால் மூடி சீல் வைத்த சிலையை திறக்க சொல்லி தாசில்தாரிடம் விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் நேற்று (05-09-2007) காலை சேரன் தலைமையில் செஞ்சி தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இன்றும் தாசில்தாரிடம் அவர்கள் மனு கொடுத்தனர்.

சர்ச்சைக்குரிய மேல்அருங்குணம் கிராமத்தில் நேற்று (05-09-2007) மாலை விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடக்கின்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் செஞ்சி வந்துள்ளார்.

அவரிடம் கட்சி நிர்வாகிகள் சிலைக்கு சீல் வைத்தது குறித்து கூறினர். அவர் சிலை விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+