சென்னையில் விடிய விடிய மழைbr/வெள்ளத்தில் மிதந்த சாலைகள்

Subscribe to Oneindia Tamil


சென்னை:

சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று மாலை தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்து நகரையே வெள்ளக்காடாக மாற்றியது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னை நகரில் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மேல் லேசான மழை பெய்தது. கொஞ்ச நேரம் பெய்த இந்த மழை பின்னர் நின்றது.

ஆனால் இரவு 8 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சாதாரணமாக ஆரம்பித்த இந்த மழை பின்னர் வேகம் பிடித்து கன மழையாக மாறியது.

இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த இந்த மழை நிற்காமல் விடிய விடிய பெய்தது. இதனால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது. பல பகுதிகளில் மின்சாரம் நின்று போனது. நகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல ஓடியது.

இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதித்தது. வாகனதாரர்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் வண்டிகளை நகர்த்தக் கூட முடியாமல் திணறித் தவித்தனர்.

நகரில் மட்டுமல்லாது புறநகர்ப் பகுதிகளிலும் கூட கன மழை வெளுத்து வாங்கியது.

நேற்று இரவு மட்டும் சென்னையில் 7 செமீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னமே இந்த மழைக்குக் காரணம் எனவும் அது தெரிவித்துள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+