'ஊட்டி, கொடைக்கானலுக்குப் போனால்br/குப்பை கூடையுடன் போக வேண்டும்'

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்:

ஊட்டி, கொடைக்கானலுக்குப் போவோர் கையோடு குப்பைக் கூடையைக் கொண்டு போக வேண்டும். குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டி அசுத்தப்படுத்தாமல் தடுக்க இது உதவும் என்று எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் நிர்மல் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சியோன் மெட்ரிக் பள்ளியில் சுற்றுச் சுவருக்குள் சுற்றுச் சுழல் என்ற தலைப்பில் கருத்தரங்ம் நடந்தது.

இதில் எக்ஸ்னோரா தலைவர் நிர்மல் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மக்கள் தான் குப்பைகளை உருவாக்குகிறார்கள். உள்ளாச்சி அமைப்புகள் மட்டுமே குப்பைகளை அகற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. நாமும் முடிந்த அளவு பொது இடத்தில் குப்பைகளை போடுவதை தவிர்க்கவேண்டும்.

கொடைக்கானல், ஊட்டிக்கு செல்பவர்கள் கூடவே ஒரு குப்பை கூடையையும் எடுத்துச் செல்லவேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் தடுக்க அது உதவும்.

நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்கின்றது. கடலில் உள்ள ஐஸ் மலை உருகி கடல் மட்டம் உயருகின்றது. இதனால் விரைவில் சுனாமி வரும். ஒரு கோடிப் போர் இறக்கும் அபாயம் உள்ளது. வாகன புகையை உடனே அரசு தடுக்க வேண்டும் என்றார் நிர்மல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+