வ.உ.சி பிறந்த நாள்: அதிகாரிகள் புறக்கணிப்பு!
Subscribe to Oneindia Tamil
ஒட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் நடந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழாவில் உயர் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாதது அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியது.
வ.உ.சி பிறந்த நாளான ஓட்டப்பிடாரத்தில் அவரது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தாசில்தார் ராஜன், பஞ்சாயத்துத் தலைவர் ஜெயலட்சுமி, தியாகி சங்கரன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
பிற அதிகாரிகள் யாரும் வரவில்லை. இந்த புறக்கணிப்பு இந்த ஆண்டு மட்டும் நடக்கவில்லையாம். கடந்த 2 ஆண்டுகளாகவே எந்த உயர் அதிகாரியும், எம்.எல்.ஏக்களும் வ.உ.சி. பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில்லையாம்.












Click it and Unblock the Notifications