அமெரிக்காவுக்கு கடத்தப்படவிருந்தbr/15,000 வயாகரா மாத்திரைகள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தில் கடத்த, கூரியர் பார்சல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் வயாகரா மாத்திரைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கடந்த 4ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்த ஐந்து கூரியர் பார்சல்களை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர். அப்போது அதில் 3362 அட்டை வயாகரா மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 15 ஆயிரம் மாத்திரைகள் அதில் இருந்தன. 35 கவர்களில் போடப்பட்டு அவை வைக்கப்பட்டிருந்தன.

அத்தனை கவர்களிலும் அமெரிக்காவில் உள்ள ஒரே முகவரி எழுதப்பட்டிருந்தது. இந்த கவர்களை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் ராஜன் முன்னிலையில் அதிகாரிகள் திறந்து பார்த்தபோது வயாகரா மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

விக்ரெக்எஸ்-50, டடோரா -20, விகோரா -100 ஆகிய வகை வயகாரா மாத்திரைகள் தலா 5000 இதில் இடம் பெற்றிருந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 15 லட்சமாகும். இந்திய சந்தையில் ரூ. 3 லட்சமாகும்.

இந்த வயகாரா மாத்திரைகளில் 259 கவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியிலிருந்து புக் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் இதை அமெரிக்க முகவரிக்கு புக் செய்துள்ளனர். மற்ற 97 கவர்கள் கோவையைச் சேர்ந்த ஒருவரால் புக் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூன்று பேரின் முகவரிகளையும் அதிகாரிகள் சோதித்து பார்த்தபோது பொய்யான முகவரி என்று தெரிய வந்தது.

இதுபோல வயாகரா மாத்திரைகள் கடத்தப்படுவது சாதாரண விஷயம்தான் என்றாலும் அமெரிக்காவுக்கு இந்த அளவு அதிகமாக மாத்திரைகள் கடத்தப்படவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்த மாதிரைகளை தயாரித்தது எந்த நிறுவனம், யார் இவற்றை அமெரிக்காவுக்கு அனுப்ப கூரியர் சர்வீஸை பயன்படுத்தியது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வயாகரா மாத்திரைகள் துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா கடத்தப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+