ஈழத் தமிழர்களுக்கு நிவாரணம்:br/நெடுமாறனுக்கு உதவ கோரிக்கை
கரூர்:
ஈழத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து பொருட்கள் எடுத்துச் செல்ல பழ. நெடுமாறன் போன்ற சமூக உணர்வுள்ளவர்களுக்கு அரசு உதவ முன் வர வேண்டும் என தமிழக மக்கள் கழக மாநில தலைவர் கே.எம்.முனுசாமி மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை போடுவது அநாகரீகமானது. நாடாளுமன்றத்தில் கேரள உறுப்பினர்கள் தர்ணா வரை சென்றது வன்மையாக கண்டிக்கதக்கது.
ஈழ மக்களுக்கு உணவு, உடை, மருந்து பொருட்கள் எடுத்துச் செல்ல பழ. நெடுமாறன் போன்ற சமுக உணர்வுள்ளவர்களுக்கு அரசே உதவ வேண்டும்.அப்போது தான் மனித நேயம் மலறும்.
கருரில் சாயப்பட்டறை கழிவு நீர் பிரச்சனையில் யாருக்கும் பாதிப்பு வராமல், சுற்று சூழல் பாதிப்பு ஏற்படாமலும் அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications