கோவையை சேலம் கோட்டத்துடன் இணைக்கbr/கோரி 13ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம்
கோவை:
கோவை மற்றும் திருப்பூரை சேலம் ரயில் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 13ம் தேதி கோவையில், ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்படவுள்ளது.
சேலம் ரயில் கோட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் கோவை உள்ளிட்ட சில பகுதிகளை பாலக்காடு கோட்டத்திலேயே நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சர் லாலுவிடம் வலியுறுத்தியுள்ளார். இதைப் பரிசீலிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கோவையில் இன்று பெரியார் திராவிடக் கழகம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடக் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், கேரள முதல்வர் மற்றும் கேரள மாநில எம்.பிக்கள் சேலம் கோட்ட எல்லைகளை மறு வரையறை செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கோரியுள்ளனர்.
அதாவது, கோவை உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து பாலக்காடு கோட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கையின் உள்ளர்த்தம்.
இதனால் கோவை மாவட்ட மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட மாவட்டப் பகுதிகள் நம்மை விட்டுப் போய் விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதிகள் சேலம் கோட்டத்திலேயே இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி கோவையில் வருகிற 13ம் தேதி அனைத்துக் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஆகியவை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications