திமுக - தேமுதிக பயங்கர மோதல்br/நடு ரோட்டில் அடிதடி - 12 பேர் காயம்
சேலம்:
சேலத்தில் விளம்பரப் பலகை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் திமுகவினரும், தேமுதிகவினரும் உருட்டுக் கட்டைகளுடன் நகரின் முக்கியப் பகுதியான ஐந்து ரோடு சாலையில் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ரயில் கோட்டத் தொடக்க விழாவுக்காக வருகிற 13ம் தேதி முதல்வர் கருணாநிதி சேலம் வரவுள்ளார். இதற்காக சேலம் நகர் முழுவதும் திமுகவினர் கட் அவுட்டுகள், வரவேற்பு வளைவுகள், பேனர்கள் வைப்பதில் படு பிசியாக உள்ளனர்.
இந்த நிலையில் ஐந்து ரோடு சாலையில், விளம்பர பலகை வைப்பது தொடர்பாக திமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே மோதல் மூண்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் உருட்டுக் கட்டைகளுடன் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியது.
தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் போலீஸ் படையுடன் விரைந்து வந்தார். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த போலீஸார் முயன்றனர்.
ஆனால், போலீஸ் முன்பாகவே இரு கட்சியினரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர். போலீஸாரைத் தள்ளி விட்டு விட்டு கட்டைகளுடன் அடிக்கப் பாய்ந்தனர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி இரு கட்சியினரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இந்த மோதலில் 12 பேர் படுகாயமடைந்தனர். பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்க அரசு மருத்துவமனையைச் சுற்றிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications